News March 22, 2025

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு!

image

முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு நடத்தியது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட குழு முல்லை பெரியாறு அணைக்கு வந்தது. தொடர்ந்து பேபி அணை, மதகுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் பின் குமுளியில் இன்று மாலை கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், தமிழக விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News March 23, 2025

சேப்பாக்கத்தில் விசில் போட ரெடியா…!

image

ஐபிஎல் தொடரில் CSK, MI அணிகள் மோதினால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சேப்பாக்கத்தில் இன்றிரவு CSK vs MI போட்டி நடைபெற உள்ளது. தல தோனியின் தரிசனத்திற்காக இப்போதே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அனிருத் இசை நிகழ்ச்சியுடன் போட்டி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். விசில் போட ரெடியா?

News March 23, 2025

முதல் போட்டியிலேயே சாதனை படைத்த SRH!

image

SRH அணி, தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்துள்ளது. 286/6 ரன்களை குவித்து அந்த அணி, IPLல் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை ஒரு IPL போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 287/3. இதையும் SRH தான் அடித்துள்ளது. இந்த போட்டியில், இஷான் கிஷன் 106(47), ட்ராவிஸ் ஹெட் 67(31), கிளாசன் 34(14) என அதிரடியாக ரன் குவித்தனர். இந்த ஸ்கோரை RR அடிக்குமா?

News March 23, 2025

விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்… எச்சரிக்கை!

image

நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும். SHARE IT!

error: Content is protected !!