News March 22, 2025
உதவி ஆய்வாளர் மெர்சி உடலுக்கு, மாவட்ட எஸ்.பி. மரியாதை

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மெர்சி உயிரிழந்த சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் பலரும் கலந்துக்கொண்டனர்.
Similar News
News March 23, 2025
பிஎம் கிசான் நிதியுதவிக்கு மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும்

பிஎம் கிசான் நிதியுதவியை பெற விவசாயிகள் மார்ச் 31க்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 41,973 பயனாளிகளில் 16,250 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவலர்கள், பொதுசேவை மையங்களை அணுக வேண்டும். ஏப்ரல் மாதம் வழங்கப்படும் 20ஆவது தவணை நிதியை பெற, விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
News March 23, 2025
திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்