News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 25, 2025
இளைஞர் கொலை வழக்கில் இருவர் மீது குண்டாஸ்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடந்த 19ம் தேதி அன்று இளைஞர் ஜெயசீலன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மரக்காணம் அடுத்த கந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கரன்குமாரும், சுந்தரராமன் நேற்று(மார்ச் 24) கைது செய்யப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின் அடிப்படையில், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குண்டா் சட்டத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
News March 25, 2025
குறுக்கே வந்த நாய்; பயங்கர விபத்து

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
News March 24, 2025
விழுப்புரம்: ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.