News April 1, 2024
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் அமல்

புதுவையில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.சி.பி.எஸ்.இ.வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி.பாடபுத்தகம் வாங்கப்பட்டது.
Similar News
News August 15, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது புதிதாக ‘ஸ்டார்லிங்க்’ என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.”
News August 15, 2025
சுதந்திர தினம் – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களை நினைத்துப் போற்றுவது நம்முடைய கடமை.” என கூறியுள்ளார்.
News August 15, 2025
புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <