News March 22, 2025

ராமநாதபுரத்தில் 429 ஊராட்சிகளில்  கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச்.23) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 24, 2025

BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News August 24, 2025

BREAKING: பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 4 மாதங்களில் விடைபெற தயாராகியது.

News August 24, 2025

ராம்நாடு: இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!