News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

சென்னை கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
Similar News
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
News March 23, 2025
கள்ளகாதலியுடன் உல்லாசம்: மனைவியின் தரமான செய்க

தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (மார்.21), கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெண் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி இப்படி பிளான் போட்டு சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.
News March 23, 2025
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (மார்.23) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்