News March 22, 2025
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (மார்ச் 22) உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கு விற்பனையான நிலையில், இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹100.93க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ₹92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?
Similar News
News March 23, 2025
இன்று தவாகவில் இணையும் வெற்றிக்குமரன்

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தப்படியாக 2ஆம் கட்ட தலைவராக மக்களுக்கு மிகவும் அறிமுகமான மதுரை வெற்றிக்குமரன் இன்று தவாகவில் இணைகிறார். மதுரையில் நடக்கும் இணைப்பு விழாவில் வேல்முருகன் முன்னிலையில், வெற்றிக்குமரன் மற்றும் நாதகவில் இருந்து விலகிய பலர் தவாகவில் ஐக்கியமாக உள்ளனர். கடந்த வாரம் ஜெகதீசன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
News March 23, 2025
பணக்கார ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா?

நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா? தலைநகர் புதுடெல்லி தான். 2023–24 நிதியாண்டில் ₹3,337 கோடியை இந்த ரயில்வே ஸ்டேஷன் வருவாயாக ஈட்டியிருக்கிறது. மேலும் அந்த ஆண்டு 39,362,272 பயணிகளை கையாண்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் ₹1,692 கோடி வருவாய் ஈட்டி, ஹவுரா ரயில்வே ஸ்டேஷன் 2வது இடத்தில் இருக்கிறது. 3வது, 4வது இடங்களில் முறையே சென்னை சென்ட்ரல், விஜயவாடா இடம்பிடித்துள்ளன.
News March 23, 2025
2 வாரத்தில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படவுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் இந்த தகவலை வெளியிட்டார். திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். புதிய பாலம் திறந்த பிறகே, ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளும் முடிவடையும் என்றும் கூறினார்.