News March 22, 2025
அனைத்து போலீசாருக்கும் பறந்த எச்சரிக்கை!

ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதேபோல, ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.
Similar News
News March 23, 2025
2 வாரத்தில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு

பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படவுள்ளது. பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் இந்த தகவலை வெளியிட்டார். திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். புதிய பாலம் திறந்த பிறகே, ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளும் முடிவடையும் என்றும் கூறினார்.
News March 23, 2025
ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய டோல் கொள்கை

நியாயமான சலுகைகளுடன் கூடிய புதிய டோல் கொள்கையை ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கட்டணம் குறித்த கவலைகளை தீர்ப்பதற்கும், சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் ₹64,809 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இது முந்தய ஆண்டை விட 35% அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 23, 2025
தனுஷ் இயக்கத்தில் அஜித்? வெளிவந்த அப்டேட்

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வரும் தனுஷ், அதன் பின் அஜித்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரிடம் கேட்டபோது, தகவலை மறுக்காத அவர், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.