News March 22, 2025
சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், விடுமுறை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் என அனைத்துப் பள்ளிகளும் (மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அட்டவணை) அடிப்படையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 23, 2025
கிரிக்கெட் ரசிகர்கள் Safetyக்கு ‘சென்னை சிங்கம்’

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் CSK – MI இடையே நடக்கும் எல் கிளாசிக்கோ போட்டியை காண திரளான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் IPL QR-CODE’ என்ற நவீன வசதியை சென்னை போலீஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த QR-CODE மூலம் மக்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்கலாம்.
News March 23, 2025
நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மழை தொடரும்: IMD

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நெல்லையில் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 23, 2025
போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்?

கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.