News March 22, 2025

தொழிலாளி சடலமாக மீட்பு

image

வீரராகவர் கோவில் குளம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பற்றி விசாரித்த பொழுது இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (தொழிலாளி) என்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

Similar News

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 23, 2025

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

image

திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து புறவழி நெடுஞ்சாலை செல்லும் சாலையோரம், லாரி ஒன்று நேற்று (மார்.22) நின்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற லாரி, நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கந்தன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!