News March 22, 2025
வங்கி ஸ்டிரைக் ஒத்திவைப்பு

வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.
Similar News
News March 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 215 ▶குறள்: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ▶பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
News March 23, 2025
வெங்காய விவசாயிகளுக்கு குட் நியூஸ்…!

வெங்காய ஏற்றுமதி மீதான 20% வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு மானாவாரி பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகம். உற்பத்தி அதிகரிப்பால் நாசிக் வெங்காயத்தின் விலை சந்தையில் சரிந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மத்திய அரசு ஏற்றுமதி வரியை ரத்து செய்துள்ளது.
News March 23, 2025
சுவிஸ் ஓபனில் தமிழக நட்சத்திரம் தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தமிழக வீரர் சங்கர் சுப்பிரமணியன் தோல்வியடைந்தார். பிரான்சை சேர்ந்த கிறிஸ்டோ போபோவ்வுடன் மோதிய அவர் 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரர் அன்டோசனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த சங்கர் அங்கு ஜொலிக்க தவறிவிட்டார்.