News March 22, 2025

சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி

image

சென்னை ஓட்டேரி பேங்க் தெருவைச் சோ்ந்தவர் ராமதிலகம் (54). இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மாமந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 25, 2025

குறுக்கே வந்த நாய்; பயங்கர விபத்து

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.

News March 24, 2025

விழுப்புரம்:  ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

image

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.

News March 24, 2025

விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!