News April 1, 2024
கனிமொழி வாகனத்தில் சோதனை

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தூத்துக்குடி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது 3ஆவது மைல் பகுதியில் சென்ற அவரது வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதில் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பிறகு அவர் புறப்பட்டுச் சென்றார்.
Similar News
News November 9, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
News November 9, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
3 முறைக்கு மேல் Oil-ஐ யூஸ் பண்ணால் ₹1 லட்சம் அபராதம்!

Chat உணவுகள் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், பல இடங்களிலும் இந்த Chat உணவுகளை தயாரிக்க, ஒரே எண்ணெய்யை பலமுறைக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அது உடல்நலத்திற்கு பல தீமைகள் ஏற்படுத்துகிறது. இதனால், கடைகளில் இப்படி பயன்படுத்தும் எண்ணெய்களை 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை கேரள அரசு கொண்டுவந்துள்ளது. நல்ல சட்டம்.. நம்மூரிலும் கொண்டுவரலாம் அல்லவா?


