News March 22, 2025
முகத்தில் உள்ள பருக்கள் நீங்க!

*ஆரஞ்சு தோலை பொடியாக்கி முகத்தில் தடவி வரலாம்.
*தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
*கற்றாழையில் உள்ள சில பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும்.
*எலுமிச்சை சாறு – வைட்டமின் சி அதிகம் உள்ளதால் முகப்பருக்களை தடுக்கும்.
*ஆமணக்கு எண்ணெய் – ரிசினோலிக் அமிலம் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.
Similar News
News March 22, 2025
ரயில்களில் இரவு 10 மணிக்கு மேல் இதை செய்யக்கூடாது

ரயில் பயணத்தில் இரவு 10 மணிக்கு மேல் சிலவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். இரவு 10 மணிக்கு பிறகு, ரயில்களில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சத்தமாக பேசவோ, வீடியோ பார்க்கவோ, பாட்டு கேட்கவோ கூடாது. விதிகள் மீறப்படும்போது, சம்பந்தப்பட்ட பயணிகள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
News March 22, 2025
இணையத்தை அலற வைக்கும் GROK.. மஸ்கின் Reaction

எலான் மஸ்கின் AI சாட்பாட் Grok தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். இந்திய அரசியல், கிரிக்கெட், காசிப் பற்றிய அதன் பதில்களை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நேர்மையானவர் மோடியா? ராகுலா? என கேட்ட போது ராகுல் என GROK பதிலளித்தது. இதுதொடர்பான கட்டுரை பிபிசியில் வந்தது. மிகவும் சர்ச்சையான இவ்விகாரத்துக்கு வாய்விட்டு சிரிப்பது போன்ற Smileyஐ மட்டும் எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
News March 22, 2025
டி காக் காலி… முதல் விக்கெட்டை இழந்தது கொல்கத்தா!

18வது ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் கீப்பர் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பியுள்ளார். ஹேசல்வுட் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த டி காக், அடுத்து கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகியுள்ளார். டி காக் பேட்டில் உரசிய பந்தை ஜிதேஷ் சர்மா டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார்.