News March 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 214
▶குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
▶பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

Similar News

News March 24, 2025

சிறிய இலக்கை நிர்ணயிங்கள்…

image

வெற்றியாளர்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேண்டாத விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல் இருக்க முடியும். அதேபோன்று உங்கள் இலக்கு அடையும் அளவில் இருக்க வேண்டும். யதார்த்தமில்லாத பெரிய இலக்கை நிர்ணயித்து, அடைய முடியவில்லை என்று வருந்தாமல் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்று, முன்னேறுங்கள்!

News March 24, 2025

பறிபோன 17 பிஞ்சு உயிர்கள்… பாகிஸ்தானில் பரிதாபம்

image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜனவரி – மார்ச் வரை நடத்திய கணக்கெடுப்பில் தட்டம்மை பாதிப்பால் 17 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 24, 2025

தினமும் இரு வேளை அவசியம்!

image

பல் வலி, ஈறுகள் அழற்சி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட தினமும் ஆயில் ஃபுல்லிங் செய்வது நல்ல பலனைத்தரும். 1 டீஸ்பூன் உப்பை லேசான சுடு தண்ணீரில் கலந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வாய் கொப்பளியுங்கள். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயையும் எடுத்துக்கொள்ளலாம். பேக்கிங் சோடாவை பேஸ்டாக்கி ஈறுகளின் மீது தடவுவதால் அழற்சி தடைபடும். வீக்கம் குறையும்.

error: Content is protected !!