News March 22, 2025
இன்றைய (மார்ச் 22) நல்ல நேரம்

▶மார்ச் – 22 ▶பங்குனி – 08 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 AM – 03:00 AM ▶குளிகை: 06:00 AM- 07:30 AM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
Similar News
News March 24, 2025
செவ்வாய் தோஷம் போக்கும் முருக வழிபாடு!

பூர்வ ஜென்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்காளாவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், அந்த கிரகத்திற்குரிய அதிதேவனான முருகனுக்கு விரதமிருந்து, விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாடி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்குங்கள். அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.
News March 24, 2025
சிறிய இலக்கை நிர்ணயிங்கள்…

வெற்றியாளர்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேண்டாத விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல் இருக்க முடியும். அதேபோன்று உங்கள் இலக்கு அடையும் அளவில் இருக்க வேண்டும். யதார்த்தமில்லாத பெரிய இலக்கை நிர்ணயித்து, அடைய முடியவில்லை என்று வருந்தாமல் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்று, முன்னேறுங்கள்!
News March 24, 2025
பறிபோன 17 பிஞ்சு உயிர்கள்… பாகிஸ்தானில் பரிதாபம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜனவரி – மார்ச் வரை நடத்திய கணக்கெடுப்பில் தட்டம்மை பாதிப்பால் 17 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.