News March 22, 2025
DELIMITATION: சென்னையில் பல மாநில CMகள் முகாம்

மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. CM ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனையில் பங்கேற்க கேரளா, தெலங்கானா, பஞ்சாப் CMகள் கர்நாடகா, ஒடிசா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் TN வந்துள்ளனர். இன்றைய ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 23, 2025
Ration cardல் மொபைல் எண் மாற்றனுமா? இத பண்ணுங்க

ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. அதில் மொபைல் எண் இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். இதனை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. நீங்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
News March 23, 2025
ரோஹித் சர்மா டக் அவுட்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். கலீல் அகமது வீசிய பந்தில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பியுள்ளார்.
News March 23, 2025
ஆரம்பமே அமர்க்களம்… வெற்றியுடன் தொடங்கிய SRH

RR அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் SRH அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH, 286 என்ற இமாலய ரன்களை குவித்தது. இஷான் கிஷான்(106*), ஹெட்(68) உள்ளிட்டோர் பேட்டிங்கில் அசத்தி இருந்தனர். இதனை அடுத்து, களமிறங்கிய RR அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் உள்ளிட்டோர் அரைசதம் அடித்தனர். எனினும் அந்த அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.