News March 22, 2025
எம்பி சந்தித்த மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர்

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.
Similar News
News April 7, 2025
மயிலாடுதுறை: அங்கன்வாடியில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்(5), குறு அங்கன்வாடி பணியாளர்(1), அங்கன்வாடி உதவியாளர்(4), பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News April 7, 2025
மயிலாடுதுறை: போராட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டம் ஏப்.8ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போரட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
News April 6, 2025
மயிலாடுதுறை: அனைத்தும் அருளும் அமிர்தகடேஸ்வரர்

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.