News March 22, 2025
சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

சென்னை- மும்பை அணிகள் வரும் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மோதும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.30 மணி முதல் 6.50 வரை சேப்பாக்கம் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அனிருத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இந்த போட்டி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Similar News
News March 23, 2025
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து அரசியல் கட்சிகளிடம் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
News March 23, 2025
SRH vs RR: சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்!

ஹைதராபாத்தில் நடைபெறும் SRH அணிக்கு எதிரான போட்டியில் RR அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் Impact வீரராக களமிறங்குகிறார். பேட்டிங்கில் மிரட்டும் SRH அணி இந்த போட்டியில் எவ்வளவு ரன்களை குவிக்கும் என நினைக்குறீர்கள்?
News March 23, 2025
வீல் சேரில் இருந்தாலும் விளையாடுவேன்.. தோனி

அன்கேப்டு வீரராக CSK-வில் சேர்க்கப்பட்டுள்ள தல தோனி (43) மிக வயதான வீரராக இருக்கிறார். அவர் இந்த IPL தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என கடந்த சில நாள்களாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், நான் விரும்பும் வரை CSK அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். காயம் அடைந்து நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை இழுத்து வந்து விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஓய்வு குறித்த செய்திக்கு தோனி பதிலடி கொடுத்துள்ளார்.