News March 22, 2025
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும்

மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News March 22, 2025
மாநிலம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்!

மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.
News March 22, 2025
TN, பஞ்சாப் மட்டுமா பாதிக்கும்? பகவந்த் சிங் மான்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பஞ்சாப் CM பகவந்த் சிங் மான் உறுதியளித்துள்ளார். கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தரும் தண்டனை என விமர்சித்தார். இதனால் TN, பஞ்சாப் மட்டுமின்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களும் பாதிக்கும் என்றார்.
News March 22, 2025
பாஜக பீஸ் போன பல்ப்: சேகர்பாபு

ஊழலை மறைக்க சிலர் (திமுக) மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். பாஜக என்பது பியூஸ் போன பல்பு; அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், திமுகவை மிரட்டி பார்ப்பதுபோல அமித்ஷா பேசுகிறார். அவரின் மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றார்.