News March 22, 2025
பூமி தாங்குமா?… அசுர வேகத்தில் வரும் சிறுகோள்…!

540 அடியில் தாஜ்மஹால் அளவிற்கு பெரியதாக இருக்கும் சிறுகோள் ஒன்று அசுர வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது. 5 மில்லியன் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருக்கும் அது, மணிக்கு 77,282 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மார்ச் 26 மாலை 5:04 மணியளவில் பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனடி பாதிப்பு எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
திமுகவில் இணையும் அதிமுகவின் அடுத்த தலைவர்!

தோப்பு வெங்கடாசலம் வரிசையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாபெரும் விழாவை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம். உள்கட்சி பூசல் காரணமாக Ex அமைச்சர் அன்வர்ராஜா, Ex MP மைத்ரேயன் என அடுத்தடுத்து அதிமுக புள்ளிகள் திமுகவில் ஐக்கியமான நிலையில், K.A.செங்கோட்டையன் விவகாரத்தால் கொங்கு மண்டலத்தை திமுக குறிவைத்துள்ளது.
News September 15, 2025
ரெக்கார்டுகளை வரிசைக்கட்டிய கேப்டன் SKY!

Pak-க்கு எதிரான போட்டியில் கேப்டன் SKY, 37 பந்துகளில் 47* ரன்களை விளாசி, அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் அவர் 2 ரெக்கார்டுகளை படைத்துள்ளார்.
➱T20-ல் Pak-க்கு எதிராக, இந்திய கேப்டனின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் இடத்தில் கோலி(57) உள்ளார்.
➱Pak-க்கு எதிராக T20 போட்டியை வென்ற 3-வது கேப்டன் என்ற சாதனையையும் SKY படைத்துள்ளார். முன்பாக தோனி, ரோஹித் ஆகியோரும் Pak-க்கை வென்றுள்ளனர்.
News September 15, 2025
தூக்கத்தை இழந்த திமுகவினர்: நாராயணன் திருப்பதி

அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை என்று அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்திற்கு வந்து விடும் என எச்சரித்த அவர், அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதியாகியிருப்பீர்கள் என்றும் சாடியுள்ளார்.