News March 22, 2025
இரவில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது.
Similar News
News March 22, 2025
2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22) காலை நேர வர்த்தகப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனையாகிறது.
News March 22, 2025
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சை காசாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் (40) கடந்த 13ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஆனால், பிரகாஷை மனைவி நாகலட்சுமியும், அவரது கள்ளக்காதலன் வீரக்குமாரும் சேர்ந்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.
News March 22, 2025
இலங்கை செல்லும் பிரதமர் மோடி!

அரசுமுறை பயணமாக வரும் 5ஆம் தேதி PM மோடி இலங்கை செல்லவுள்ளார். அப்போது, திரிகோணமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.