News March 21, 2025
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ப.சிவானந்தம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் உள்ளனர்.
Similar News
News August 25, 2025
கரூரில் நீங்களும் பால் பண்ணை தொடங்கலாம்!

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைக்க இலவச பயிற்சி கரூரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழகம் முழுவதும் 2520 காலியிடங்கள் உள்ளன. மேலும், பால் பண்ணை அமைக்க அரசு சார்ந்த மானியங்களும் உண்டு என்படு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 25, 2025
கரூர்: வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வு!

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.
News August 25, 2025
கருர்: பாலியல் தொழில் செய்த பாஜக பிரமுகர்!

கரூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுபடி, தாந்தோணிமலை, ஊரணிமேட்டு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் சோதனை நடத்தி அங்கு பாலியல் தொழில் செய்ததாக பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதியை கைது செய்தனர்.