News March 21, 2025

வரத்தை வாரி வழங்கும் காளிகாம்பாள்

image

சென்னை ஜார்ஜ் டவுனில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு உண்டான சம புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. மேலும், இந்த குழந்தை வரம், திருமண வரம் போன்ற வேண்டிய வரத்தை அள்ளிக்கொடுக்கும் அம்மனாக உள்ளார். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறாரகள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

சென்னை கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

ரயிலில் கீழ் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு சலுகைகள்

image

முன்பதிவு ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கை பயணிகளுக்கு தனி உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இரவில் அந்த இருக்கையில் சம்பந்தப்பட்ட பயணியைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது. அதேபோல், தேவையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கீழ் இருக்கை பயணியை எழுப்புவது, தொந்தரவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

சென்னையில் பள்ளிகள் இயங்கும்

image

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இன்று (மார்.22) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் விடுமுறை என்று நினைத்து வீட்டிலேயே தூங்கி விடாதீர்கள். மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!