News March 21, 2025
BREAKING: 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து 6 மாதங்களுக்கு 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஹனி ட்ராப் விவகாரத்தை எழுப்பி, சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் தொடர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
Similar News
News March 22, 2025
புதிய ரேஷன் கார்டுகளுக்கு ₹1,000 மகளிர் உரிமை தொகை!

புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்த 57,327 பேருக்கு ‘Smart Card’ அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியிருந்த நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 22, 2025
சுந்தர்.சி – நயன்தாரா மோதல்?

பொள்ளாச்சியில் நேற்று நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, உதவி இயக்குநர் ஒருவரை நயன்தாரா திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் டென்ஷனான சுந்தர்.சி, ஷூட்டிங்கை ரத்து செய்ததோடு, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததால், பிரச்னை முடிவுக்கு வந்ததாம்.
News March 22, 2025
வல்லுநர் குழு அமைக்க முன்மொழிந்த ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் CM ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும் இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு எனப் பெயரிடவும் பரிந்துரைத்துள்ளார்.