News March 21, 2025
சூரிய சக்தி பேனல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற தனியார் சோலார் பேனல் நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிகிரி,டிப்ளமோ, ஐடிஐ, +2 தேர்ச்சி பெற்றிந்தால் போதும். சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் மாத சம்பளம் 15,000 முதல் 25000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News September 21, 2025
விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய எ.வ.வேலு

தி.மலை மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு (செப்.20) அமைச்சர் எ.வ.வேலு பரிசுத்தொகை சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 21, 2025
தி.மலை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

தி.மலை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க
News September 21, 2025
பர்வதமலைக்கு போறீங்களா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை, தென்மாதிமங்கலம் பகுதியில், 4,560 அடி உயர பர்வதமலை மீது, மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 3ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னனால் கட்டப்பட்டது. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கு எல்லாம் மலை என்று பொருள். இங்குள்ள சிவனுக்கு நீங்கள் அர்ச்சனை செய்வதே தலத்தின் சிறப்பு. பர்வதமலை போக துடிக்கும் உங்க நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க!