News March 21, 2025
IPL போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்?

IPL 2025 போட்டிகள், கொல்கத்தாவில் நாளை இரவு தொடங்குகின்றன. இதையடுத்து மே மாதம் 25ஆம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளது. இதனால் ஸ்டார் குழும டிவி சேனல்களில் பல்வேறு மொழிகளிலும் போட்டிகளை நேரலையாகக் கண்டு களிக்கலாம். போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். செயலி எனில் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாக காணலாம்.
Similar News
News March 22, 2025
சினிமாவில் செண்டிமெண்ட் பார்த்தாரா உதயநிதி?

சேலம் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொன்னபோது, உதயநிதி தயக்கம் அடைந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து மாமன்னனில் நடித்தார் எனக் கூறிய மாரி, கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்ற என்னுடைய சினிமா பாணி, இன்றைக்கு பல இயக்குனர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 22, 2025
மாநிலம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்!

மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.
News March 22, 2025
TN, பஞ்சாப் மட்டுமா பாதிக்கும்? பகவந்த் சிங் மான்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பஞ்சாப் CM பகவந்த் சிங் மான் உறுதியளித்துள்ளார். கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தரும் தண்டனை என விமர்சித்தார். இதனால் TN, பஞ்சாப் மட்டுமின்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களும் பாதிக்கும் என்றார்.