News March 21, 2025
குமரி எரிவாயு நுகர்வோருக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
Similar News
News September 21, 2025
குமரி: இலவச தையல் மிஷின்.! APPLY பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க
News September 21, 2025
குமரி மக்களே., இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News September 21, 2025
குமரி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

குமரி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.