News March 21, 2025
வார விடுமுறை: 616 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளையும், நாளை மறுநாளும் வாரயிறுதிநாள் விடுமுறையாகும். இந்த விடுமுறைக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்ல ஏதுவாக 616 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இன்றும், நாளையும் இயக்குகிறது. இதில் அதிகபட்சமாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270, நாளை 275 பஸ்களை இயக்குகிறது. கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
Similar News
News September 15, 2025
4 முறை கர்ப்பமாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 4 முறை கர்ப்பமாக்கியதாக ஜாய் கிரிசில்டா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பமாக்கிவிட்டு அதனை கருக்கலைப்பு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என கிரிசில்டா வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரத்திலும் மாதம்பட்டி சிக்குவாரா?
News September 15, 2025
BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்

செங்கோட்டையன் விவகாரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை EPS ஆலோசிக்கவுள்ளதாக செய்தி பரவியது. இதனால், அவர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மாற்றியமைக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமித்ஷாவை சந்திக்கும் பிளான் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்றும், மழை காரணமாகவே பரப்புரை பயணம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் EPS விளக்கம் அளித்துள்ளார்.
News September 15, 2025
Parenting: காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும்போது குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின் போது, உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை குளிக்கமுடியாத பட்சத்தில், குழந்தைகளில் உடலை வெதுவெதுப்பான நீரில் துடைப்பது நல்லது. SHARE.