News March 21, 2025

அனல் மின் நிலைய தீ விபத்தை தடுக்க குழு அமைப்பு

image

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வகையில் தீ விபத்து பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர் தலைமையில், குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கே க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தூத்துக்குடி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..!

News August 23, 2025

கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.

News August 23, 2025

தூத்துக்குடி: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!