News March 21, 2025
ஆப்ரிக்காவில் பசிப்பிணித் தீர்த்த யூடியூபர்!

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் MR.Beast–க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோகோ பண்ணைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக, காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளியில் ஒன்றில் முதல் வாரத்திலேயே 10% உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 31, 2025
நிலநடுக்கத்தின் மத்தியிலும் தாக்குதல்

நிலநடுக்கத்தால் 1,700 மாண்ட நிலையிலும், மியான்மர் ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக, அந்நாட்டின் கிளர்ச்சி அமைப்பு கரேன் நேஷனல் யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது. மீட்பு பணிகளுக்கு செய்யாமல், படைகளை அனுப்பி மக்களை தாக்குவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராணுவ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2021 முதல் அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
News March 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 222 ▶குறள்: நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. ▶பொருள்: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
News March 31, 2025
காம மாத்திரைகள்.. வார்னே மரணத்தில் திடுக் தகவல்கள்

AUS கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் அவர் இறந்து கிடந்த அறையில், உடலுறவுக்கான காமகிரா மாத்திரைகள் இருந்ததும், இதை உட்கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆனால், இது வெளியில் தெரிந்தால் அவமானம் என எண்ணி ஆஸி. அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து மாத்திரைகளை அகற்ற சொன்னதாகவும் தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.