News March 21, 2025
வேலூரில் 3,900 நீர்நிலை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன

வேலூர் வனக்கோட்டத்தில் வேலூர், அமிர்தி உட்பட 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஏரி, ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை வசிக்கும் பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 84 வகை நீர்நிலைகளை சுற்றிவாழும் 3,900 பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் விவரங்கள் சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News April 18, 2025
வேலூர் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 17, 2025
வியப்பை உண்டாக்கும் வேலூர் குவளைகள்

வேலூர் அருகே கரிகிரி கிராமத்தில் சீன களிமண்ணால் தயார் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் நவாப்களால் பயன்படுத்தபட்டுள்ளன. அதில் குவளையின் உள்ளே ஊற்றப்படும் நீர் திரும்ப மேல் வழியாக வராமல், நீர் ஊற்றும் துவாரத்தின் வழி மட்டுமே வரும் வகையில் மேஜிக் குவளைகள் நவாப்களின் பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்பட்டுள்ளன. தனித்துவமான கரிகிரி மட்பாண்டங்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலை தேடும் வேலூர் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க