News March 21, 2025
மனித உரிமை செயற்பாட்டாளர் ‘கடல முகமது’ காலமானார்

தமிழகத்தையே அதிரவைத்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில், பிடிபி இயக்கத் தலைவர் மதானிக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கேரளாவை சேர்ந்த முன்னாள் நக்சலைட்டான கடல முகமது(79). போலீஸ் அவரை எவ்வளவு சித்ரவதை செய்தபோதும், பொய்சாட்சி சொல்ல மறுத்து, 9 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என விடுதலையானார். நேர்மைக்கும், துணிவுக்கும் சமூக செயற்பாட்டாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவர் காலமானார். RIP!
Similar News
News September 16, 2025
இந்தியா முழுவதும் SIR? அக்.7-ல் தீர்ப்பு

பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்த (SIR), நடைமுறைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதை முழுமையாக ரத்து செய்ய நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வரும் அக்.7-ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அது இந்தியா முழுமைக்கும் SIR மேற்கொள்ளப்படுமா என்பதற்கான உத்தரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 16, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதை இன்று ஒருநாள் மட்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்று கடைசி நாள் என்பதால், ஒரேநாளில் அதிகமானோர் தாக்கல் செய்ய முனைப்பு காட்டினர். இதனால், வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கியது. அதன் காரணமாக, இன்று ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 7.3 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளனர்.
News September 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.