News March 21, 2025
இறையாண்மைக்கு எதிராக பேசினாரா ராகுல்?

காங்கிரஸ் MP ராகுல் காந்தி நேரில் ஆஜராக, உ.பி சம்பல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 15ல், காங்கிரஸ் தலைமை அலுவலக திறப்பு விழாவின்போது பாஜகவை மட்டுமின்றி இந்திய அரசையும் எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது என பேசியிருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News September 16, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதை இன்று ஒருநாள் மட்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்று கடைசி நாள் என்பதால், ஒரேநாளில் அதிகமானோர் தாக்கல் செய்ய முனைப்பு காட்டினர். இதனால், வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கியது. அதன் காரணமாக, இன்று ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 7.3 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளனர்.
News September 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
News September 16, 2025
ASIA CUP: தொடரை விட்டே வெளியேறும் PAK?

கடந்த IND vs PAK போட்டி டாஸின் போது, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தலையீடு அதிகமாக இருந்ததாக ICC-க்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. டாஸின் போது சூர்யா கைகொடுக்க மாட்டார் என தங்கள் கேப்டன் சல்மானிடம் கூறியதாகவும், இது தொடர்பாக இரு கேப்டன்களிடம் தனித்தனியாக அவர் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனால் அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.