News March 21, 2025
நடிகர் விஷாலின் உறவினர் மீது மோசடி வழக்கு!

வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தொழிலதிபர் கிரிதிஷ் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. நடிகர் விஷால் தங்கையின் கணவரும், நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிதிஷ் வீட்டுக் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ₹2.5 கோடி பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ, மோசடிக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிந்துள்ளது.
Similar News
News July 8, 2025
90% மூளை இல்லாமலும் சாதாரண வாழ்க்கை… எப்படி?

பிரான்சில் 44 வயதான ஒருவர் குடும்பம், வேலை என சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திடீரென ஒரு நாள் தீராத கால் வலி ஏற்பட ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையின் 90% பாகத்தை காணவில்லை. இதனை ஹைட்ரோசெபலஸ் (Hydrocephalus) என்பார்கள். அதாவது, மூளைக்குள் சீராக இருக்க வேண்டிய தண்டுவட திரவம் (CSF) அதிகமாகச் சேர்ந்து, மூளை அமைப்புகளை அழுத்துவதால் இப்படியான நிலை ஏற்படுகிறது.
News July 8, 2025
பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
பள்ளி வேன் விபத்து… அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம்

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட்டை வேன் ஒட்டுநர் அலட்சியமாக கடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் 3 மாணவர்கள் பலியானது பெரும் சோகம்.