News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் லிங்க்

Similar News

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News March 30, 2025

தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை

image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரியில் பணி புரியும் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக CM cellக்கு க்கு புகார் சென்றுள்ளது. தூய்மை பணியாளருக்கு ஒப்பந்த மேளாளர் ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பணி புரிபவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துரை அதிகாரிகள் ரவிச்சந்திரனிடமும், தூய்மை பணியாளர்களிடமும் விசாரணை செய்து வருகின்றது.

News March 30, 2025

வட்டார கல்வி அலுவலக அறையில் 15 ‘டேப்லட்’ திருடு

image

தியாகதுருகம் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, ‘டேப்லட்’ எனும், கையடக்க கணினிகள் மொத்தம், 218 வந்தன. இதில், 191 டேப்லட்டுகள் ஆசிரியர்களுக்கு தரப்பட்ட நிலையில், மீதம், 27 ‘டேப்லட்’கள் அறையில் இருப்பு வைக்கப்பட்டன. நேற்று பொருட்களை எழுத்தர் சரிபார்த்த பொழுது 15 டேப்லட்டுகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். 

error: Content is protected !!