News March 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
Similar News
News August 15, 2025
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவியேற்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றி வந்த டாக்டர் எம்.பூவதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கே.சத்யபாமா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
News August 15, 2025
கிருஷ்ணகிரி: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் <
News August 15, 2025
மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் நேற்று (ஆக.14) பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.