News March 21, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு 185 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <
Similar News
News April 10, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
வெட்டுடையா காளி கோயிலில் ஏன் காசு வெட்டிப் போடுகிறார்கள்?

சிவகங்கை அரியாக்குறிச்சியில் உள்ள வெட்டுடையா காளி கோயில் மாவட்டத்தின் ஒரு முக்கிய கோயிலாகும். இங்கு காளி எட்டு கைகளுடன் அசுரனை வதம் செய்தபடி காட்சி கொடுக்கிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், நீதி கிடைக்க இந்தக் கோயிலில் காசு வெட்டிப் போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் காளி தட்டிக் கேட்பால் என்பது நம்பிக்கை. மாலையில் காளி மீது சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு.
News April 10, 2025
காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.