News March 21, 2025

பிரதமரின் வெளிநாட்டு டூருக்கு எவ்வளவு செலவு?

image

2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இதற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ₹259 கோடி. தங்குமிட செலவு மட்டும் ₹104 கோடி. இதர செலவுகளுக்கு ₹75.7 கோடியும், போக்குவரத்துக்கு ₹71.1 கோடியும் செலவாகி இருக்கிறது. நாடுகள் வரிசையில் அமெரிக்க பயணத்திற்கு தான் அதிகமாக ₹38.2 கோடி செலவாகியுள்ளதாம்.

Similar News

News April 1, 2025

IPL: பஞ்சாப் vs லக்னோ இன்று மோதல்

image

நடப்பு ஐபிஎல் சீசனின் 13ஆவது லீக் போட்டியில் இன்று பஞ்சாப், லக்னோ அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இரவு 7.30 அணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதுவரை விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி கனியை ருசித்த ஸ்ரேயஸ் ஐயரின் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியிலும் வெல்வதற்கு முனைப்பு காட்டும். அதேவேளையில், விளையாடிய 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ள ரிஷப் பண்டின் லக்னோ அணி, இந்த போட்டியில் வெல்ல போராடும்.

News April 1, 2025

தமிழின வெறுப்பை உமிழும் எம்புரான்: வேல்முருகன் காட்டம்

image

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பதாக வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடும்பள்ளி டேம் என்ற மாற்று பெயரில், இது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மலையாள சினிமாவில் தொடர்ந்து தமிழின வெறுப்பை உமிழும் கருத்துகள் இடம்பெறுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவும், தமிழர்களை கொச்சைப்படுத்துவதை கைவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

News April 1, 2025

முட்டைக்கு டஃப் கொடுக்கும் புரத உணவுகள்

image

முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. அதற்கு மாற்றாக, சைவம் சாப்பிடுபவர்கள் கீழ்காணும் 4 உணவுகளை எடுத்து கொள்ளலாம். பூசணி விதைகளில் 8.5 கிராம் புரதம் உள்ளது. இதை சாலடுகள், ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். பன்னீரில் 12 கிராம் புரதம் உள்ளது. ஜீரணிக்க எளிதானது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். 32 கிராம் பாதாமில் 7 கிராம், 80 கிராம் கொண்டைக்கடலையில் 8 கிராம் புரதம் உள்ளது.

error: Content is protected !!