News March 21, 2025
திருப்பூருக்கு ரூ.890 கோடி!

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 24, 2025
சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
திருப்பூர்: குறைந்த விலையில் பைக், கார்!

திருப்பூரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் ஏலக்குழுவினரால் வரும் ஆகஸ்ட்.26 காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. அவினாசி, மடத்துபாளையம் ரோடு. சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவிப்பு.
News August 24, 2025
காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.