News March 21, 2025
பங்குச்சந்தையில் அதிக முதலீடு: எச்சரிக்கும் மத்திய அரசு

மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 31, 2025
செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

செங்கோட்டையன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், செங்கோட்டையனை வைத்து அவர்களைக் கட்சியில் இணைக்க BJP முயல்வதாக கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரகசியமாக டெல்லி சென்று திரும்பிய அவர், இன்று மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
News March 31, 2025
பெண்களே கவனம்.. இந்த ஜூஸ் புற்றுநோயை உண்டாக்கலாம்!

வாஷிங்டன் யூனிவர்சிட்டி ஆய்வின்படி, சர்க்கரை நிறைந்த ஜூஸ்களை அதிகமாக அருந்தும் பெண்களுக்கு, வாய்வழி புற்றுநோயின் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளில் 1,62,602 பெண்களின் உணவுப் பழக்கங்களை ஆய்வு செய்ததில், இத்தகவல் தெரியவந்துள்ளது. இதில், கவலைக்குரிய விஷயம், புகை – மது பழக்கம் இல்லாதவரும் அதிகமாக சர்க்கரை ஜூஸுகளை அருந்துவதால் பாதிக்கப்படுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
News March 31, 2025
₹500-க்காக இளைஞர் குத்திக்கொலை!

பணம் மனிதனை மிருகமாக்கும் என்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. நியூ உஸ்மான்பூரில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த தில்ஷித் என்ற நபரிடம் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பணம் பறிக்க முயன்றனர். தன்னிடம் இருந்த ₹500 தரமறுத்து அவர்களுடன் தில்ஷித் மல்லுக்கட்ட, திடீரென கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பியோடிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.