News March 21, 2025
அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

விழுப்புரம் மாவட்டம் வளவனூா், பாலாஜி நகரை சோ்ந்தவர் அய்யப்பன் (13). வளவனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-வது படித்து வந்தாா். அய்யப்பனும், இதே பகுதியைச் சோ்ந்த கவின் (12), சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவின் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வளவனூா் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 20, 2025
புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாகப் பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி முன்னிலையில், புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது. இவ்விழாவில், ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்புரையாற்றினர்.
News September 20, 2025
ராமதாஸ் தனித்துப் போட்டி – இரண்டாக உடையும் பாமக

சமீபத்தில் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் தனித்துப் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அரசியல் நகர்வுகள் தமிழக தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 20, 2025
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோதரர்கள்: பொன்முடி அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே (வெள்ளிக்கிழமை) நேற்று வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த கொங்கராயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.