News March 21, 2025
திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?

சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படும் திருப்பத்தூர் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை “திருப்பத்தூர்” என்று மாற்றியதாக கூறப்படுகிறது. உங்களை போல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 20, 2025
பொது மக்களுக்கு காவல்துறையின் மழைக்கால பதிவு

(செப் 20)திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மழைக்கால எச்சரிக்கை பதிவு அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஈர கைகளால் வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டுகளை தொட வேண்டாம் ஈர கைகளால் தொடுவதன் மூலம் மின்சாரம் தாக்கி உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
News September 20, 2025
திருப்பத்தூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் . இதை SHARE பண்ணுங்க.
News September 20, 2025
திருப்பத்தூர்: மனைவியை கொன்ற கணவன் சரண்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூர் பகுதியில் வசிக்கும் திருக்குமரன் மனைவி நேற்று கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவரது கணவர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தான் தான் தனது மனைவி அறிவழகியை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.