News March 21, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினம் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் கிராம சபை கூட்டம் வரும் 29.03.2025 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதான் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

ஆர்கே பேட்டை அடுத்த கோசராபள்ளி கூட்டு சாலையில் இன்று காலை தனியார் பேருந்து பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கோசராபள்ளி காலனியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மீது தனியார் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!