News March 21, 2025
கிழங்குகளும்… பயன்களும்…

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.
*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
கருணை கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.
*உருளைக் கிழங்கு – நார்சத்தை அதிகரிக்கும்.
*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.
Similar News
News September 16, 2025
பாக்.,வுடன் கைகுலுக்கவேண்டிய கட்டாயம் இல்லை: BCCI

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனதற்கு, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்க வேண்டும் என்பது எந்த விதியிலும் இல்லை என BCCI விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் இந்த செயலால் கடும் அதிருப்திக்கு உள்ளான பாக்., ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் புகாரளித்திருந்தது. இதனால், போட்டி முடிந்தவுடன் கைக்கொடுப்பது கட்டாயம் இல்லை என BCCI-யின் அதிகாரி கூறியுள்ளார்.
News September 16, 2025
X கணக்கில் CM ஸ்டாலின் செய்த மாற்றம்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற பிரச்சாரத்தை CM ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்திருந்தனர். இந்த நிலையில், CM ஸ்டாலின் X கணக்கில் தனது பெயருடன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என இணைத்துள்ளார். அதேபோல, புரொபைல் போட்டோவிலும் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்பதை சேர்த்துள்ளார்.
News September 16, 2025
நீ ஊருக்கே கிளம்பு: PAK-கிற்கு நோ சொல்லும் ICC?

போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை மாற்ற வேண்டும் என்ற PAK கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ICC நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த <<17723508>>IND vs PAK<<>> போட்டியில், டாஸின் போது, இரு கேப்டன்களை கைகொடுக்க விடாமல் செய்ததாகவும், அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் பாக்., கூறியிருந்தது. ஆனால், இந்த சர்ச்சையில் நடுவர் எந்த பங்கையும் வகிக்கவில்லை என ICC தரப்பு கருதுகிறது.