News March 21, 2025
நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. PAKக்கு அதிகளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்களையும் அந்நாடு வழங்குகிறது. மேலும் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக PAKக்கு அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 16, 2025
அக்.1 முதல் கட்டணம் உயர்கிறது

ஆதாரில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற வசூலிக்கப்படும் கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆக உயரும் எனவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு அப்ளை செய்பவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பாஜக

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இதில் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்கவுள்ளனர்.
News September 16, 2025
Cinema Roundup: ரீ-ரிலீசாகிறது அஜித்தின் ‘அட்டகாசம்’

* தர்ஷன், கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காட்ஸ்ஜில்லா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. * விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் 3வது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடக்கம். * ‘கருப்பு’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியிருக்கிறார். * அஜித்தின் ‘அட்டகாசம்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி ரீ-ரிலீசாகிறது. துல்கர் சல்மானின் D41 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.