News March 21, 2025
8ஆவது முறையாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக 147 நாடுகளில் மக்களின் சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்தப் பட்டியலில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது.
Similar News
News March 22, 2025
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும்

மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
News March 22, 2025
சுவிஸ் ஓபன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய ஜோடி

சுவிஸ் ஓபன் தொடரில் இந்தியாவின் த்ரிஷா ஜோலி – காயத்ரி கோபி சந்த்ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் த்ரிஷா – காயத்ரி இணை, ஹாங்காங்கின் யூங் புய் லாம் – யூங் டிங் இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
News March 22, 2025
IPL-ல் புதிய அவதாரம் எடுக்கும் ‘கேன் மாமா’…!

கேன் மாமா என தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். பக்காவான க்ளாஸ் பிளேயராக திகழும் அவரை IPL மெகா ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. IPL-ல் வில்லியம்சனை மிஸ் செய்யும் ரசிகர்களுக்காகவே அவர் புதிய அவதாரம் எடுக்க உள்ளார். போட்டி வர்ணனையாளராக களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.