News April 1, 2024
திருச்சியில் 2ஆம் கட்ட குலுக்கல் பணி தொடக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
Similar News
News March 13, 2026
திருச்சி: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.
News March 13, 2026
திருவெறும்பூர்: துரை வைகோ எம்பி கோரிக்கை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை மற்றும் பொது அறிவிப்பு ஒலி பெருக்கிகள் செயல்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் ரயில்களின் வருகை மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி எம்பி துரை வைகோ, ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
திருச்சி: இனி Gpay, Phonepe தேவையில்லை!

திருச்சி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..


