News March 21, 2025
F1 ரேஸர் ஷூமேக்கரை அறிமுகம் செய்தவர் மரணம்

அயர்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரும், புகழ்பெற்ற F1 அணியின் உரிமையாளருமான எடி ஜோர்டன்(76) காலமானார். உலகின் தலைசிறந்த கார் பந்தய வீரர் என அறியப்படும் ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரை அறிமுகப்படுத்தியது இவரது ஜோர்டன் கிராண்ட் பிரிக்ஸ் அணிதான். 1970- 1980 காலக்கட்டத்தில் கார் பந்தய வீரராக ஜொலித்த எடி ஜோர்டன், அதன் பிறகு கார் பந்தய அணியை உருவாக்கி F1 பந்தய உலகிற்குள் நுழைந்தவர் ஆவார்.
Similar News
News July 8, 2025
டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
News July 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
News July 8, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.