News March 21, 2025
CM, MLA-க்கள் சம்பளம் இரட்டிப்பாக உயரப்போகுது…!

கர்நாடக சட்டப்பேரவை பிரதிநிதிகளின் ஊதியத்தை இரட்டிப்பாக்கும் மசோதா நாளை கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அம்மாநில முதல்வருக்கு மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்களுக்கு தலா 1.25 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.80,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது: ஐநா

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழக்கும் அவலம் காசாவில் தொடர்கிறது. இந்நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல், இனப்படுகொலையை செய்வதாக ஐநாவின் விசாரணை ஆணையம் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. என்று தணியுமோ?
News September 16, 2025
Sports Roundup: இன்று தமிழ் தலைவாஸ் Vs பெங்களூரு புல்ஸ்

* ஸ்விஸ் மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு PM மோடி வாழ்த்து. * சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி. * ஆசிய கோப்பையில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராப்ட்-ஐ நீக்க வேண்டும் என்ற பாக். கோரிக்கை நிராகரிப்பு. *டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3,000 ரன்கள் அடித்து UAE வீரர் முகமது வஸீம் சாதனை. * புரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்.
News September 16, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு ஏமாற்றம்

புதிதாக 17 லட்சத்திற்கு மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல், அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.15-ல் வெளியாகும் என கூறப்பட்டது. இதனால், அரசின் அறிவிப்பு வெளியாகும் என நேற்று ஆர்வமுடன் காத்திருந்த மகளிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.